அகண்டுவிரிந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளி கொள்ளும் முயற்சியில், நம் அறிவியல் ஆராய்ச்சிகள் கவனம் செலுத்தினாலும், நாம் வாழும் பூமியில் கண்டறியப்படாத மர்மங்கள் எவ்வளவோ உள்ளன என்பது மறுக்க முடியாதது. பூமியில் உயிர்கள் உருவானதற்கு இன்றியமையாத ஒன்று நீர். பிரபஞ்சத்தில் பல இடங்களில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் கிடைத்திருந்தாலும், திரவ நிலையில் பூமியை தவிர்த்து வேறு எங்கும் நீர் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை ஏதும் இல்லை. 'நீல கிரகம்' என்று அழைக்கப்படும் பூமியின் மேற்பரப்பில், எழுபது சதவிகிதர்த்திற்கும் மேல், சராசரியாக பன்னிரண்டாயிரம் அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த அகண்ட நீர்ப்பரப்பின் உருவாக்கத்தை விளக்கும் வகையில், கடந்த வாரம் ஓர் முக்கிய கண்டுபிடிப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பூமியின் வட அமெரிக்க கண்டத்தின் அடியில் 640 கி.மீ. ஆழத்தில், மிகப்பெரிய நீர்த்தேக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் இது, நமக்கு பரிச்சயமான திரவ நிலையாகவோ, பணிக்கட்டியாகவோ, நீராவியாகவோ இல்லை, ஓர் தாது பொருளின் மூலக்கூறு கட்டமைப்பில் பொறிந்துள்ளது.
கடல்களிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் நீராவி மேலெழுந்து, மேகங்களாக உருவெடுத்து, பின்பு மழையாக பூமிக்கு மீண்டும் வந்து சேரும் நீரின் சுழற்சிமுறையை நாம் ஆண்டுதோறும் காண்கிறோம். அது போல், மேற்பரப்பின் நீர், பூமியின் டெக்டானிக் அகடுகளின் (Tectonic Plates) அசைவால், பூமிக்கடியே நடுப்பகுதியான மான்ட்டில் (Mantle) என்னும் பகுதிக்கு தள்ளப்பட்டு, அதீத வெப்பமும், அழுத்தமும் காரணமாக, நீரின் (H2O Molecule) கூறு, பிளவு பெற்று, சில வகை தாது பொருளில் பொறித்துக் கொள்கிறது. அத்தகைய தாது பொருளான ரிங்வுடைட் (Ringwoodite) என்னும் நீல நிற கல்லின் பாகம், கடந்த மார்ச் மாதம், பிரேசில் நாட்டிலுள்ள ஓர் எரிமலை அருகே தோண்டும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாதுப்பொருளின் மீது தொடங்கப்பட்ட ஆராய்ச்சியில் விளைந்தது, இந்த கண்டுபிடிப்பு. இவ்வாறு, மேற்பரப்பில் உள்ள நீரும், பூமிக்கடியே கற்களுள் பொறிந்து தென்படும் நீரும் ஓர் உலகளாவிய நீர் சுழற்சி முறையை (Whole-world Water Cycle) சேர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

![]() |
| ரிங்வுடைட் தாதுப் பொருள். நன்றி :phys.org |
சரி, பிரேசில் நாட்டில் கிடைத்த ஓர் கல்லை வைத்து, வட அமெரிக்க கண்டத்தின் அடியே நீர்ப்பரப்பு இருப்பதாக எவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்? பொதுவாக 'மேக்மா' (Magma), என்னும் உருகிய கற்களால் ஆன எரிமலைக்கொழம்பு பூமியின் நடுப்பகுதியில் 80 கி.மீ. ஆழத்தில் மட்டுமே காணப்படும்.
![]() |
| புவியின் குறுக்கு வெட்டு தோற்றம். நன்றி : விக்கிபீடியா |
அனால், 640 கி.மீ. அடியில், இதே எரிமலைகொழம்பு வட அமெரிக்க கண்டத்தின் அடியே இருப்பதை கண்டுபிடிக்கப்படுள்ளது. இதற்கு முதன்மை காரணம் ரிங்வுடைட் தாதுப் பொருளில் பொரிந்துள்ள நீர் என்பது என்று ஆராய்ச்சி கூடத்தில் செய்யப்பட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேல் குறிப்பிட்டுள்ள ஆழத்தில் காணப்படும் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, அந்த நிலையை, ரிங்வுடைட் தாதுப் பொருள் மீது உட்படுத்தப்பட்டது. அப்போது, அதில் பொறிந்த நீர் கூறு, கல்லை உருக்கி குழம்பாக மாற்றியது தெளிவானது. ஆய்வுக்கூடத்தில் நடைப்பெற்ற அதே செயல் முறை, பூமிகடியில் நடைப்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால், எரிமலைக்குழம்பு கண்டறியப்பட்டது நீர்த்தேக்கம் இருப்பதற்கான சிறந்த ஓர் சான்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக