"இந்த வாரம் செவ்வாய் வாரம்", என்று கூட கூறலாம். பூமிக்கு மிக அருகில் வருவதால் இன்று ( ஏப்ரல் 08, 2014) தொடங்கி, மூன்று நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தைச் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே காணலாம். கடந்த சில நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையும் , செவ்வாயின் சுற்றுப்பாதையும் நெருங்கி வந்த நிலையில், இந்த மூன்று நாட்களில் தெளிவாக செவ்வாய் தென்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு ஐந்தரை கோடி கி.மீ. தொலைவில் காணப்பட்ட செவ்வாய், தற்பொழுது 9.24 கோடி கி.மீ. தொலைவில் காணலாம். தூரம் அதிகமானாலும், இக்காட்சியை வெறுங்கண்ணால் காண முடியும் என்று பிர்லா கோளரங்கின் நிர்வாக இயக்குனர் திரு.ஐயம்பெருமாள் பத்திரிக்கையாளரிடம் கூறியுள்ளார். இந்த நிகழ்வையொட்டி வானவியலில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பூமி மற்றும் செவ்வாய் வெவ்வேறு வேகங்களில் சூரியனை சுற்றி வருவதாலும், செவ்வாயின் சுற்று பாதை அதீத நீள்வட்டவடிவம் (Highly eccentric elliptical orbit)) கொண்டதாலும், ஒவ்வொரு முறையும் பூமி அருகே செவ்வாய் வரும் பொழுது, சிறு வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓர் சிறப்பம்சம் ஆகும்.
பொதுமக்கள் செவ்வாய் கிரகத்தை காண்பதற்கு வசதியாக , ஏப்ரல் 8, 9, 10 ஆகிய நாட்களில் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, சென்னை பிர்லா கோளரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியைப் பற்றி மேலும் ஆங்கிலத்தில் படிக்க:
'தி ஹிந்து' நாளிதழ்
ஸ்பேஸ்.காம் வலைத்தளம்

நன்றி : 'தி ஹிந்து' நாளிதழ்