சனி கிரகத்தையும் அதன் பல்வேறு நிலவுகளையும் ஆய்வு செய்யும் நோக்கத்துடன், ஐரோப்ப, அமெரிக்க மற்றும் இத்தாலி விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் ஒன்றிணைந்த முயற்ச்சியால் 1997ஆம் ஆண்டு பூமியிலிருந்து அனுப்பப்பட்டது 'கஸினி' ( Cassini ) விண்கலம்.
இந்த விண்கலத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இம்முறை, சனி கிரகத்தின் ஐந்தாவது மிகப்பெரிய நிலவான 'என்க்லேடஸ்' ( Enceladus ) நிலவின் மீது ஆய்வின் கவனம் விழுந்தது.
( நன்றி : 'தி ஹிந்து' நாளிதழ் )
என்க்லேடஸின் மேற்பரப்பு பனித்தகடால் மூடப்பட்டது என்பது முன்னதாகக் கண்டறிந்தது. கஸினி கலம் இந்நிலவை மூன்று முறை கடந்து சென்ற பொழுது, அதன் புவியீர்ப்பு சக்தியின் தாக்கத்தால், இக்கலத்தின் பாதையில் பல மாறுதல்கள் ஏற்பட்டது. இந்த புவியீர்ப்பு வேறுபாடுகளை ஆய்வு செய்ததில், என்க்லேடஸின் பனிக்கட்டி மேற்பரப்பின் அடிப்பகுதி பணியை விட அடர்த்தியான அமைப்பை கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வமைப்பு திரவ நிலை கொண்டிருக்கும் சாத்தியமும் எழுந்துள்ளது. அவ்வாறு, நீர் நிலை இருக்கும் பட்சத்தில், அது பூமியில் காணப்படும் சமுத்திரங்களைப் போல் பறந்து விரிந்து இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு நீர் முதன்மையான தேவையாகும். எனவே, நீர் கண்டுபிடிக்கப்படுவது உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறியாக கொள்ளலாம். ஆகையால், என்க்லேடஸில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்கு நுண்ணுயிர்கள் கண்டறிவதற்கான சாத்தியம் பன்மடங்கு பிரகாசமாகும். உறுதி செய்வதற்கு, கஸினி விண்கலம் எதிர்காலத்தில் மீண்டும் பல முறை என்க்லேடஸை கடந்து சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வியாழன் மற்றும் சனி கிரகங்களின் பல்வேறு நிலவுகளில் நீர் நிலை இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும், பூமியைத்தவிர வேறு எந்த கோளிலோ, நிலவிலோ, நீர் இருப்பது இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியின் ஆங்கிலப் பதிப்பைபடிக்க:
தி ஹிந்து நாளிதழ்
பாப்புலர் சையன்ஸ் வலைத்தளம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக