மே 26ஆம் தேதி இந்தியாவின் பதினைந்தாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்றார், திரு. நரேந்திர மோடி. அவரோடு, 44 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுள், நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையின் மந்திரியாக பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னை பல்கலைகழகத்தில் மருத்துவம் பயின்றார் என்று, இவருடைய கல்வி விவரங்கள் பற்றி ஆராயும் பொழுது, நான் அறிந்த செய்தி. அலுவகத்தில் முதல் நாளே, காஷ்மீர் பிரச்சனை பற்றி சர்ச்சை மிக்க கருத்து தெரிவித்து தேவையற்ற விளம்பரத்தை இவர் பெற்றாலும், மிகுந்த அனுபவமும், தொழில் துறை வல்லமையும் கொண்டவராக திகழ்கிறார். இதனால், இவருடன் வேலை செய்வதற்கு, அறிவியல் துறை அதிகாரிகள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
![]() |
| டாக்டர் ஜிதேந்திர சிங் (நன்றி: என்.டி.டி.வி) |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னை பல்கலைகழகத்தில் மருத்துவம் பயின்றார் என்று, இவருடைய கல்வி விவரங்கள் பற்றி ஆராயும் பொழுது, நான் அறிந்த செய்தி. அலுவகத்தில் முதல் நாளே, காஷ்மீர் பிரச்சனை பற்றி சர்ச்சை மிக்க கருத்து தெரிவித்து தேவையற்ற விளம்பரத்தை இவர் பெற்றாலும், மிகுந்த அனுபவமும், தொழில் துறை வல்லமையும் கொண்டவராக திகழ்கிறார். இதனால், இவருடன் வேலை செய்வதற்கு, அறிவியல் துறை அதிகாரிகள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக