தந்தை தன் பிறந்த குழந்தை முதல் முதலாக கண் விழித்து பார்க்கும் தருணத்தில் அனுபவிக்கும் அதே உற்சாகமும் பரபரப்பும் இப்பொழுது பிரபஞ்சத்தின் பிறப்பை ஆராயும் விஞ்ஞானிகளிடையே காணப்படுகிறது. அதற்கு காரணம், பிறந்த குழ்ந்தை எழுப்பும் கூச்சல்கள் போல, பிறந்த உடன் பிரபஞ்சம் எழுப்பிய செயல்பாடுகளின் அறிகுறிகள் ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் (மார்ச் 17, 2014) செய்தி வெளியானது.
இந்த திருப்புமுனைக்கு முன் வந்த பாதை, இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ச்டீனிடமிருந்து தொடங்கியது. இவரது, வெகு பிரபலமான 'பொதுச் சார்பு கோட்பாடு' (' Big Bang Theory'), அண்டத்தின் வெளியும் காலமும் ஒருங்கிணைந்த தன்மையால், ஈர்ப்பலைகள் ( Gravitational Waves ) உருவாகும் என்னும் விளைவை கணிக்கிறது. அந்த கணிப்பை சரி பார்க்க பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியால், ஈர்ப்பலைகளை கண்டறியும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக, பிரபஞ்சம் பிறந்த உடன் வெளிப்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஏனெனில், இந்த சிறப்பு வாய்ந்த ஈர்ப்பலைகள் கண்டுபிடித்தால், பிரபஞ்சம் பிறப்பை விளக்கும் 'பெரு வெடிப்பு கோட்பாடு' சரியாக இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஈர்ப்பலைகள் கண்டறிவது கடினமான ஒன்று. ஆனால் அவ்வலைகளால் ஏற்படும் பாதிப்புகளின் அறிகுறிகளை ஆராய்வது மூலமாகவும், அவற்றின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். அத்தகைய அறிகுறிகள் இதுவரை சில கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்பு மிக முக்கியமானதும் பெரு வெடிப்பு கோட்பாட்டிற்கு மிகுந்த வலு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
பூமியின் தெற்கு துருவத்தில் இடம் பெற்றுள்ள 'பைசெப்' (' BICEP ' - Background Imaging of Cosmic Extragalactic Polarization ) எனப்படும் ஆய்வு நிலையத்தில் உள்ள வானியல் ஆராய்ச்சி கருவிகளால் இந்த கண்டுபிடிப்பு ஏற்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது என்று இப்பொழுதே விஞ்ஞான வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
நன்றி: நியூ ஸையன்டிஸ்ட், விக்கிபீடியா

![]() |
| நன்றி: நியூ ஸையன்டிஸ்ட் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக