விஞ்ஞான ஜாம்பவான்கள் என்றதும், நம்முள் பலருக்கும் நினைவில் வருவது ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன் என்பவர்களே. 'இந்திய விஞ்ஞான ஜாம்பவான்கள்' என்றால் மட்டுமே, இந்தியர்கள் பெயர் நினைவுக்கு வந்தால் அது ஆச்சர்யப் படுவதற்கில்லை. உங்களால் எத்தனை இந்திய விஞ்ஞானிகளின் பெயர் குறிப்பிட முடியும்?
நம் நாடு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் ஆண்டு வந்த பொழுது, ஆங்கில வழிக்கல்வி அறிமுகப் படுத்தப் பட்டதோடு, அவ்வழிக்கல்வி கற்றால் மட்டுமே அரசு பணிக்கு தகுதி கிடைக்கும் என்ற கட்டாயமும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்பதே யதார்த்தம். அவற்றால் எந்தளவுக்கு நன்மையும் தீமையும் விளைவித்தது என்ற கேள்வி விவாதத்திற்குரியது. இருந்தாலும், இந்த கட்டுரைக்கு தொடர்பான ஓர் தீய விளைவை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிரிட்டிஷார்களின் கல்வி முறையில் மேற்க்கத்திய கணிதம், விஞ்ஞானம் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது. பண்டை கால இந்திய மண்ணில் காணப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகளும், இந்தியர்களின் கணித மற்றும் விஞ்ஞான பண்பாடும் புதைக்கப்பட்டது. நாம் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் பிரிடிஷர்களுக்கு அடிமையானோம்.
இந்திய சுய ஆட்சி கண்ட பின்னும், இந்திய விஞ்ஞானத்தின் சரித்திரம் சிறிதளவே இந்தியர்களை சென்றடைந்தது என்பதே மிகுந்த வருத்தம் அளிப்பதாகும். இந்நிலை மாறி வருகிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு இந்தியர்கள் பலரின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிப்பு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரத்தை நமது நாமே பெருமை படுத்திக்கொள்ள பயன்படுத்துவதில் எந்த உபயோகமும் இல்லை. மாறாக, இதனை நம் விஞ்ஞான கலாச்சாரத்தை மீட்பதற்கு ஓர் தூண்டுகோலாக பயன்படுத்த வேண்டும்.
படம்: ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய கணித மற்றும் வானவியல் மேதை ஆர்யபட்டாவின் சிற்பம். ஆனால் இச்சிற்பம் கலைஞனின் கற்பனையில் பிறந்ததே தவிர ஆர்யபட்டாவின் உண்மை உருவம் அன்று. அவரது தோற்றத்தை பற்றி எந்த தகவலும் நம்மிடையே இல்லை (!).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக